இந்தியா

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருகிறது: ராகுல் காந்தி

DIN

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு சான்றாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

கரோனா பொதுமுடக்கத்தின்போது, இந்திய பணக்காரர்களின் வருமானம் 35% அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பிரச்னை மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ராகுல் காந்தி மத்திய அரசை தீவிரமாக விமர்சித்து வருகிறார். ஒரு நாட்டில் 3-4 முதலாளிகளுக்காக அரசை நடத்துவது பிரதமர் மோடியாகத் தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT