மகாராஷ்டித்தில் 51 ஆயிரத்தை எட்டியது கரோனா பலி
மகாராஷ்டித்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை எட்டியுள்ளது.
மகாராஷ்டித்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 2,771 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,21,184ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று 56 பேர் பலியானார்கள்.
இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 51,000ஆயிரத்தை எட்டியது. தற்போதைய நிலவரப்படி 43,147 சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இன்று 2,613 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19,25,800ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், 1,95,127 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.