மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பக்தர்கள் உபயத்தால் ரூ.9 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட வெள்ளிக்கவசம் மூலவருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை புறவழிச்சாலையில் ரயில் நிலையம் பின்புறம் வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்பட முருகனுக்கு உகந்த திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இக் கோவிலில் மூலவருக்கு வெள்ளிக்கவசம் வடிவமைக்க பக்தர்களால் முடிவு செய்யப்பட்டு நன்கொடையாளர்களிமிருந்து நிதி திரட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவர் வழிவிடு முருகன் வள்ளி, தெய்வானை, விநாயகப் பெருமான் உள்ளிட்ட சிலைகளுக்கு 9 கிலோ எடையில் வெள்ளிக்கவசம் புதிதாக தயாரிக்கப்பட்டது. அதன்பின் கடந்த வியாழக்கிழமை இரவு தைப்பூச நாளில் வள்ளிதெய்வானை சமேத முருகனுக்கும், விநாயகருக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. மூலவருக்கான பீடம் பித்தளைத் தகடுகளால் பொருத்தப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.