முகப்பு
இந்தியா

சென்னையில் மண்டலவாரியாக இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,121 ஆக குறைந்துள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,121 ஆக குறைந்துள்ளது.  

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையிலும் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.   

சென்னை மாநகராட்சி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 3,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,32,529 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,187 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,21,221 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் நேற்று (புதன்கிழமை) மட்டும் 27,757 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாரில் 300க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.