வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸின் ஆதிக்கம் அதிகரிக்கும்: உலக சுகாதார நிறுவனம் 
இந்தியா

வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸின் ஆதிக்கம் அதிகரிக்கும்: உலக சுகாதார நிறுவனம்

டெல்டா வகை கரோனா வைரஸ்கள் தற்போது உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது, வரும் மாதங்களில் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸ்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வ

DIN


ஜெனீவா: டெல்டா வகை கரோனா வைரஸ்கள் தற்போது உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது, வரும் மாதங்களில் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸ்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாராந்திர தொற்றுநோயியல் துறை புள்ளி விவரங்களை பதிவேற்றியிருக்கும் உலக சுகாதார நிறுவனம், இது பற்றி தெரிவிக்கையில், 96 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரவல் காணப்படும் நாடுகளில் இந்த வகை கரோனா பாதிப்பு உயர்ந்து வருவதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

உருமாறிய வைரஸின் பரவல் அதிகரிக்கும் நிலையில், உலக சுகாதார நிறுவனம், உருமாறிய டெல்டாவானது மிக விரைவாக மேலும் அதிதீவிர வைரஸாக உருமாறி, வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று எச்சரித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்களிலேயே, டெல்டா வகை கரோனா வைரஸ், மிக அதிகமாக பரவும் அபாயம் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களிடையே இது மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT