முகப்பு
இந்தியா

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 48,786-ஆக உயர்வு: 1,005 பேர் பலி

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 48,786 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன, தொற்று பாதிப்புக்கு 1,005 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 48,786 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன, தொற்று பாதிப்புக்கு 1,005 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு தொடா்ந்து குறைந்து வந்த நிலையில் இரு தினங்களாக சற்று உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 48,786 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,04,11,634 -ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை, 5,37,064-ஆகக் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 61,588 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,94,88,918 ஆக அதிகரித்துள்ளது. 

தொடா்ந்து 48-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசியளவில் குணமடைவோா் விகிதம் 96.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

நாட்டில் தினசரி கரோனா உயிரிழப்பு 1,005 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,99,459 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 19,21,450 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,20,21,494 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 33,57,16019 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.