பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் வசூலிக்கும் முறை வியாழக்கிழமை(ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எஸ்பிஐ வங்கியிலோ அல்லது அதன் ஏடிஎம்களிலோ ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதன்பின்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் இலவசமாக நான்கு முறை பணம் எடுக்க முடியும். அதற்கு அடுத்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணங்கள் வசூலிக்கப்படும். எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் இதர வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் இதே கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்துடன் பொருள்கள் மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) சேர்த்து பிடித்தம் செய்யப்படும்.
இவைத்தவிர, கசோலை வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் முதல் பத்து காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதற்குமேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு காசோலைக்கு கட்டணம் வசூலிக்கும் முறையும் வியாழக்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிதாக காசோலை புத்தகம் வாங்கினால் ரூ.40 கட்டணம் வசூலிக்கும் முறையும் அமலுக்கு வந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த காசோலை பயன்பாட்டுக்கு வரம்பு கிடையாது.
கரோனா பெருந்தொற்று காரணமாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை எடுக்கும் வரம்பை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து மற்ற வங்கிக் கிளைகளிலிருந்து, வித்ட்ராயல் படிவம் மூலம் ரூ.25000 வரை பணம் எடுக்கலாம். மற்ற கிளைகளில் இருந்து காசோலை மூலம் இப்போது ரூ.1 லட்சம் வரை எடுக்க முடியும். மூன்றாம் தரப்பு பணம் எடுக்கும் வரம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்தல், வங்கி கிளையிலிருந்து பணம் எடுத்தல் மற்றும் பணம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்குமான அடிப்படை சேவை கட்டணங்களை வசூலிக்கும் முறை வியாழக்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.