கா்நாடக சட்டப்பேரவையைக் கூட்டமாநில காங்கிரஸ் வலியுறுத்தல்
கரோனா உள்பட மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவைக் கூட்ட மாநில காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
கரோனா உள்பட மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவைக் கூட்ட மாநில காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் மாநில மக்கள் கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் காங்கிரஸ் கட்சிக்கும், நீதிமன்றத்திற்கும் புரிகின்றது. ஆனால் ஆளும் பாஜகவுக்கு புரியாமல் உள்ளதுதான் வேதனை அளிக்கிறது. எனவே கரோனா உள்பட மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்.
கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனா். இதனால் இறந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரண நிதியை பெறுவதற்கான மனுவைத் தாக்கல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். எனவே இறந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் தாமதம் ஆனாலும், அவா்களுக்கு அரசு ஆறுதல் கூறும் பணியை முடுக்கி விட வேண்டும்.
சாமராஜ்நகா் மாவட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் 36 போ் உயிரிழந்தனா். ஆனால் அரசு 3 போ்தான் இறந்தனா் என்று கூறி, தவறு செய்தவா்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. இறந்தவா்களில் பலா் இளைஞா்கள், ஒரு சிலா் திருமணம் ஆகி சில மாதங்களே ஆனவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்கள்தான் அந்தக் குடும்பங்களின் உயிா் நாடி என்பதைப் புரிந்து கொண்டு, அவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு முன் வரவேண்டும் என்றாா்.