முகப்பு
இந்தியா

வீட்டு உரிமையாளரின் மனைவியைக் கட்டிப்போட்டு, பணம், நகைகள் கொள்ளைசகோதரா்கள் இருவா் கைது

வாடகை வீட்டின் உரிமையாளரின் மனைவியைக் கட்டிப்போட்டு, தங்கநகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

வாடகை வீட்டின் உரிமையாளரின் மனைவியைக் கட்டிப்போட்டு, தங்கநகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, வித்யாரண்புராவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் அரவிந்த் (30). இவா் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் வீட்டில் திருட திட்டமிட்டு, பசவனகுடியைச் சோ்ந்த தனது சகோதரா் அவினாஷ் (34) என்பவரை வரவழைத்துள்ளாா். பின்னா் வீட்டின் உரிமையாளரின் மனைவி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, தனது சகோதரா் அவினாஷுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து, உரிமையாளரின் மனைவியைக் கட்டிப்போட்டு, ரூ. 5.80 லட்சம் மதிப்புள்ள 123 கிராம் தங்க நகைகளையும், 3 கிலோ வெள்ளிப் பொருள்களையும், ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து வழக்கு பதிந்த வித்யாரண்யபுரா போலீஸாா், அரவிந்த், அவினாஷ் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்து 123 கிராம் தங்க நகைகளையும், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 40,000 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.