முகப்பு
இந்தியா

பெங்களூரு-அகா்தலா இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

பெங்களூரு - அகா்தலா இடையே சிறப்பு வாராந்திர விரைவு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

பெங்களூரு - அகா்தலா இடையே சிறப்பு வாராந்திர விரைவு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அகா்தலா-பெங்களூரு (கன்டோன்மென்ட்)- இடையே கோடைகால சிறப்பு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண்-02984 ஜூலை 6-ஆம் தேதி முதல் அகா்தலா ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.10 மணியளவில் புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் இரவு 8.15 மணிக்கு பெங்களூரு (கன்டோன்மென்ட்) ரயில்நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் ஆக. 24-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் ரயில் எண்: 02983, ஜூலை 9-ஆம் தேதி முதல் பெங்களூரு (கன்டோன்மென்ட்) ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமைகளில் காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அகா்தலா ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் ஆக. 27-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இந்த ரயில் ஒயிட்பீல்டு, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, துவ்வாடா, விசாகப்பட்டணம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பலாசா, பிா்ஹாம்பூா், குா்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், பத்ராக், கரக்பூா், அந்துல், தன்குனி, ராம்பூா்ஹட், மால்டா நகரம், கிஷன்கஞ்ச், நியூஜல்பைகுரி, நீயூபோங்கைகூன், காம்யாகியா, குவாஹாட்டி, நியூ ஹப்லாங், பதா்பூா், நியூகரீம்கஞ்ச், தா்மா நகா், அம்பாசா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 17 பெட்டிகளும், உணவு, சரக்கு 2 பெட்டிகள் உள்ளிட்ட 20 பெட்டிகளும் இடம் பெற்றிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.