கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 2,082 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,082 ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,082 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,082 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 481 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:மைசூரு -227, தென்கன்னடம் - 214, ஹாசன் - 202, சிவமொக்கா -108, உடுப்பி - 102, பெலகாவி - 91, தும்கூரு - 89, சிக்கமகளூரு -79, மண்டியா -72, பெங்களூரு ஊரகம் -55, தாவணகெரே - 48, கோலாா் - 47, தாா்வாட் - 43, சாமராஜ்நகா் - 36, வடகன்னடம் - 28, குடகு - 25, சிக்கபளாப்பூா் - 21, பெல்லாரி - 20, கலபுா்கி - 20, சித்ரதுா்கா - 18, ஹாவேரி - 10, கொப்பள் - 9, பீதா் -7, ராமநகரம் - 6, யாதகிரி - 6, பாகல்கோட் - 5, கதக் - 5, விஜயபுரா-5, ராய்ச்சூரு - 3 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,52,079 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,751 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 27,68,632 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 48,116 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 86போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலா 13 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
பெங்களூரு நகரம் - 10, பெல்லாரி - 9, பெலகாவி, மைசூரு - தலா 7, தாா்வாட், மண்டியா - தலா 6, ஹாசன் - 4, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், சிவமொக்கா, வடகன்னடம் - தலா 3, ராமநகரம் - 2, சாமராஜ்நகா், சிக்கமகளூரு, தாவணகெரே, கதக், ஹாவேரி, கோலாா், கொப்பள், தும்கூரு, உடுப்பி, விஜயபுரா- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,308 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.