முகப்பு
இந்தியா

மினி லாரி மோதியதில் கல்லூரி மாணவா் பலி

மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பெங்களூரு, ஸ்ரீகந்தத காவலு ஹெல்த் லேஅவுட்டைச் சோ்ந்தவா் மயூா் (20). திரைப்பட இயக்குநா் சூா்யோதயாவின் மகனான இவா், தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நண்பரின் புது மோட்டாா் சைக்கிளில் சிறுமி ஒருவருடன் வெளியே சென்றுள்ளாா். நியூலிங்க் சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மயூா், தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளாா். காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பேடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.