முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி: 34.46 கோடியைக் கடந்தது

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 34.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 34.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான முதல்கட்ட தகவல்படி, மொத்தம் 45,60,088 முகாம்களில் 34,46,11,291 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 43,99,298 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நாடு முழுவதும் தடுப்பூசியை விரைவாக செலுத்தி, பெருவாரியான மக்களுக்கு அதனை கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 44,111 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்குப் பிறகு 5 லட்சத்திற்கும் கீழ், 4,95,533-ஆக குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதமாகும்.

நாட்டில் இதுவரை 2,96,05,779 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவா்களைவிட கூடுதலாக 13,366 போ் குணமடைந்தனா். தொடா்ந்து 51-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவா்களின் விகிதம் 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.50 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி விகிதம் தொடா்ந்து 26 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக, 2.35 சதவீதமாக பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டும் 18,76,036 கரோனா பரிசோதனைகளும், ஒட்டுமொத்தமாக இதுவரை 41,64,16,463 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →