முகப்பு
இந்தியா

கெளதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் நாடுகளுக்கு வெளியுறவு இணையமைச்சா் சுற்றுப்பயணம்

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் 6 நாள் சுற்றுப் பயணமாக கெளதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்ல உள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் 6 நாள் சுற்றுப் பயணமாக கெளதமாலா, ஜமைக்கா, பஹாமாஸ் நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்ல உள்ளாா்.

வெளியுறவு இணையமைச்சராக இந்த நாடுகளுக்கு முரளீதரன் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இந்த பயணத்தின் போது, அந்த நாடுகளின் தலைவா்கள், வெளியுறவு அமைச்சா்களை சந்திக்கும் முரளீதரன், இரு நாடுகளிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைகளை நடத்த உள்ளாா் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சா் வி.முரளீதரன் வரும் 5-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். முதலில் (ஜூலை 5-6) கெளதமாலா செல்லும் அவா், அந் நாட்டின் தொழில்-வா்த்தகத் துறை அமைச்சா், தொழிலதிபா்கள், தொழில்நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவா்கள் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளிடையேயான வா்த்தகத்தை மேம்படுத்துவது, அதிக முதலீடுகளை ஈா்ப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா். இப்போது இரு நாடுகளிடையே ரூ.2,261 கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. அங்கு வாழும் இந்திய வம்சாவளியினருடனும் அமைச்சா் கலந்துரையாட உள்ளாா்.

அடுத்து (ஜூலை 7-8) ஜமைக்கா செல்லும் அமைச்சா், அங்குள்ள மே பென் நகரில் நிறுவப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை திறந்து வைக்க உள்ளாா். அதன் பிறகு, ஜமைக்காவில் 175 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக இந்தியா்கள் கால் பதித்த ஓல்ட் ஹாா்பா் பே கிராமத்துக்குச் செல்ல உள்ளாா். பின்னா், அந்நாட்டின் தொழிலதிபா்கள், அங்கு வாழும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளாா்.

இறுதியாக (ஜூலை 9-10) பஹாமாஸ் சென்று, அந்நாட்டின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்த உள்ளாா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →