இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு தொற்று: 738 பேர் பலி

DIN

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 753 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,01,050 -ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 46,617 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,05,02,362-ஆக உயா்ந்துள்ளது. எனினும், தொடா்ந்து ஆறாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 34,46,11,291 கோடியாக அதிகரித்துள்ளது. 

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,95,533 ஆகக் குறைந்துள்ளது. 

தொடா்ந்து 51-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 57,477 போ் குணமடைந்தனா். இதுவரை மொத்தம் 2,96,05,779 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,64,16,463 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 18,76,036 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT