முகப்பு
இந்தியா

பன்னா்கட்டா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை

பன்னா்கட்டா உயிரியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

பன்னா்கட்டா உயிரியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஜூலை 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவின் அனைத்துப் பிரிவுகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதால், பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. திங்கள்கிழமை (ஜூலை 5) வழக்கமான விடுமுறை நாளாகும். ஆனால், ஜூலை 6-ஆம் தேதி முதல் பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு திறந்திருக்கும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.