இந்தியா

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மருத்துவமனையில் அனுமதி

DIN

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங். இவருக்கு கடந்த 2 வாரங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் லக்னௌவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

இந்த நிலையில் கல்யாண் சிங் தற்போது சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கல்ணாண் சிங்கின் இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு விகிதம் சீராக உள்ளன. இருப்பினும் அவர் முழு சுயநினைவோடு இல்லை. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநராகவும் பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT