இந்தியா

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை

DIN

கரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா 2ஆவது அலை காரணமாக இந்தியாவில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தில்லியில் கரோனாவுக்கு 128 மருத்துவர்கள் உயிரிழந்துளளனர். 
பிகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79 பேர், மேற்குவங்கத்தில் 62 பேர், தமிழகத்தில் 51 பேர், ஆந்திரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இந்த ஆண்டு, மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மருத்துவர்கள் என்றால் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள். இது தான், உயிரிழந்த மருத்துவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. 
தங்களின் உயிர் மற்றும் குடும்பத்தினரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்களை கௌரவப்படுத்துவது போல் அமையும். இதனால், ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT