முகப்பு
இந்தியா

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

குஜராத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 7.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் 11.8 கிலோமீட்டர் ஆழத்திலும், டுதாயிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
கடந்த 2001 ஆண்டு ஜனவரியில் கட்ச் மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 6.9ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.