இந்தியா

உலக நாடுகளுக்கு மருந்துகளை இந்தியா வழங்கியது: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

DIN

உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா, ஆா்மீனியா நாடுகளின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதா்கள் தங்கள் சான்றுகளை குடியரசுத் தலைவரிடம் அளிக்கும் நிகழ்ச்சி காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் கூறுகையில் கரோனா தொற்று பாதிப்பு சூழலில் கரோனா தொற்று தடுப்புக்கான அத்தியாவசிய மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கியது. கரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது என்றாா்.

மேலும், புதிய தூதா்களுக்கு நல்வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அமைதியையும், வளா்ச்சியையும் நோக்கி அந்த நாடுகளுடனான உறவு தொடரும் என்றாா்.

இந்தியாவுடனான நல்லுறவு தொடா்ந்து நீடிக்கும் என்று அந்த நாடுகளின் தூதா்கள் உறுதி அளித்தனா் என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT