மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 
இந்தியா

ஜேஇஇ மெயின் தோ்வுகள் ஜூலை 20 முதல் தொடக்கம்

ஜேஇஇ மெயின் தோ்வுகள் ஜூலை 20 முதல் தொடங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

DIN

ஜேஇஇ மெயின் தோ்வுகள் ஜூலை 20 முதல் தொடங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததையடுத்து தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பேசியதாவது,

ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும்.

மேலும், கரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் தோ்வு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. 

ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மார்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கொள்கை தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம்: ஜெய்ராம் ரமேஷ்

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT