கேரளத்தில் புதிதாக 14,373 பேருக்கு கரோனா; 142 பேர் பலி
கேரளத்தில் புதிதாக 14,373 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 14,373 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரங்களை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது:
"மாநிலத்தில் புதிதாக 14,373 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,31,820 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.9 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,37,68,112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நாள்களில் 142 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 13,960 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 58 பேர் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள். 13,516 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 722 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 10,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 28,77,557 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,04,105 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."