இந்தியா

இடைத்தரகா்களை நாட வேண்டாம்: தேவஸ்தானம்

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணி நியமனம் பெற இடைத்தரகா்களை நாட வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எம்.ஆா்.ஷ்ரேவன், சுந்தரதாஸ் உள்ளிட்டோா், சுமாா் 15 பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தேவஸ்தானத்துக்கு ஏராளமான புகாா்கள் வந்துள்ளன.

இதுகுறித்து திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தானம் அளித்த இந்த புகாரின் பேரில் ஆந்திர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் தேவஸ்தானத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்போது அதற்கான அறிவிப்புகள் முறைப்படி செய்தித்தாள்களிலும், தேவஸ்தான இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இதற்காக வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தரகா்களை நாட வேண்டாம். முறையான அறிவிப்பு வெளியிடப்படும்போது விண்ணப்பித்தால் தகுதி உள்ளவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT