ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி(IGP) விஜய் குமார் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், இதில் இருவர் லஷ்கர்-இ- தொய்பா மற்றும் ஒருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு தீவிரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த 5 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில், லஷ்கர்-இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவரும் குல்காம் பகுதியில் சுடப்பட்டனர்.
புதன்கிழமை நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் மெஹ்ரசுதீன் ஹல்வாய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பாதுகாப்புப் படையினரை கொன்றது உள்ளிட்ட பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்.
மேலும், தொடர்ந்து தீவிரவாதிகள் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.