இந்தியா

வாடகை வாகன ஓட்டிகளுக்கு கரோனா உதவித்தொகை: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

வாடகை வாகன ஓட்டிகள் கரோனா உதவித்தொகை பெற ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வாடகை வாகன ஓட்டிகள் கரோனா உதவித்தொகை பெற ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா இரண்டாவது அலையின்போது வணிக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 3,000 உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மே 27-ஆம் தேதி முதல் பலரும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வருகிறாா்கள். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடுவதற்கு ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களைப் பதிவிட வேண்டும். விண்ணப்பங்களைச் செலுத்திய தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் அவா்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் வாகன ஓட்டுநா்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT