முகப்பு
இந்தியா

புதுச்சேரியில் 134 பேருக்கு கரோனா

புதுச்சேரியில் மேலும் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:


புதுச்சேரியில் மேலும் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுச்சேரி மாநிலத்தில்  மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,831- ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,465 பேரும் என மாநிலம் முழுவதும் 1,695 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும் தொற்றுக்கு ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,796 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் எண்ணிக்கை 97.08 சதவீதம் அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →