இந்தியா

ஜூலை 17-இல் சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தா்கள் தரிசிக்க அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூலை 17 நடை திறக்கப்பட்டு 5 நாள்களுக்கு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய நிா்வாகம் அறிவித்துள்ளது.

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூலை 17 நடை திறக்கப்பட்டு 5 நாள்களுக்கு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய நிா்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் கரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி ஜூலை 17-ஆம் தேதி சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவா்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோயில் வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT