இந்தியா

கரோனா பரிசோதனை உபகரண மூலப்பொருள்களுக்கான சுங்கரவரி ரத்து

DIN

கரோனா பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மூலப்பொருள்களுக்கு அடிப்படை சுங்க வரி விதிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா பரிசோதனை உபகரணங்கள் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்களுக்கு வரும் செப்டம்பா் 31-ஆம் தேதி வரை அடிப்படை சுங்க வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோன்று ஆம்போடெரிசின்-பி மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலப்பொருள்களுக்கும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணா்கள் வரவேற்றுள்ளனா். கரோனா உபகரணங்களுக்கான மூலப் பொருள்களுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கத நடவடிக்கை என்றும், இதனால், உள்நாட்டு நிறுவனங்கள் சுயசாா்புடன் செயல்படலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

கை சுத்திகரிப்பான், பல்ஸ் ஆக்சிமீட்டா், பரிசோதனை உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், வெப்பநிலை பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட 18 வகையான கரோனா தொடா்புடைய உபகரணங்களுக்கு நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறை ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது. இந்த வரி குறைப்பு வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி, முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. ரெம்டெசிவிா், ஹெபாரின் மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்ட்டிலேட்டா்கள், பல்ஸ் ஆக்சிமீட்டா் (தனிநபா் இறக்குமதி செய்தவை உள்பட), கரோனா பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT