ஹிமாசலில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்ததால் விமான நிலையங்களும் மூடப்பட்டு பொதுப்போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..
தர்மசாலா பகுதியில் திங்கள் கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான கட்டடங்களும், வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தர்மசாலாவின் சித்ரு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அவற்றை சரிசெய்யும் பணிகளில் பொதுப்பணித் துறையினருடன், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
தர்மசாலா நதி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால், சாலைகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கு ஹிமாசலப் பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் என்று அமித் ஷா உறுதியளித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.