முகப்பு
ஜூலை 15-ல் வாராணசி செல்கிறார் மோடி
இந்தியா

ஜூலை 15-ல் வாராணசி செல்கிறார் மோடி

பிரதமர் மோடி வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வாராணசி செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா

ஜூலை 15-ல் வாராணசி செல்கிறார் மோடி

பிரதமர் மோடி வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வாராணசி செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
ஜூலை 15-ல் வாராணசி செல்கிறார் மோடி
பகிர்:

பிரதமர் மோடி வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வாராணசி செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“பிரதமர் மோடி ஜூலை 15ஆம் தேதி வாராணசி செல்லவுள்ளார். அங்கு ரூ. 839 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு காலை 11 மணியளவில் அடிக்கல் நாட்டவுள்ளார்.

அதன்பின், பிற்பகல் 12.15 மணிக்கு ருத்ரகாஷில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை தொடங்கி வைக்கும் பிரதமர், 2 மணியளவில் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்த பின், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.” 

பிரதமர் மோடி வாராணசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →