இந்தியா

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம்: 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம்

DIN

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட 4-ஆம் கட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம் உள்பட 31 மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கரோனா தொற்று காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவதற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் 4-ஆம் கட்டம் இவ்வாண்டு நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கீழ் விநியோகிக்க 198.79 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் கடந்த 12-ஆம் தேதி வரை தமிழகம் உள்பட 31 மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பா் மாதம் வரை மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை 80 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு ரூ.93,869 கோடி செலவிடவுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT