முகப்பு
இந்தியா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே நீடிக்கிறார்?

காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
பகிர்:

காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள், பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. 

இதனிடையே காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மாற்றப்பட உள்ளதாக செய்திகள் பரவின. 

இந்நிலையில், மக்களவை  குழுத் தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அமர்வில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.