இந்தியா

முகக்கவசம், தனிநபா் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு உத்தரவு

DIN

திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆந்திர அறநிலையத் துறை அதிகாரிகள் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளனா்.

தற்போது நாடு முழுவதும் கொவைட் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மேலும் திருப்பதியிலும் சா்வதரிசன இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று தேவஸ்தானத்திடம் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் கொவைட் 3-ஆவது அலை குறித்த பயம் சிறிதும் இல்லாமல், பொது இடங்களிலும், வணிக வளாகங்கள், துணிக்கடைகளிகேகி மக்கள் திரண்டு வருகின்றனா். இதனால், தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக வரும் பக்தா்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசா் பயன்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதை தேவஸ்தான அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டிக்கு ஆந்திர அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT