கர்நாடகத்தில் மேலும் 1,990 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,990 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,990 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கரோனா பாதிப்புகள் நிலவரம் பற்றிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக 1,990 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2,537 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 45 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,76,587 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,06,933 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 35,989 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 33,642 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.