நூற்றாண்டில் சங்கரய்யா: கேரள முதல்வர் வாழ்த்து 
இந்தியா

நூற்றாண்டில் சங்கரய்யா: கேரள முதல்வர் வாழ்த்து

விடுதலைப் போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

DIN

விடுதலைப் போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிா்த்துப் போராடிய போராளி முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா. இன்று தனது 100 ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறாா்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  “விடுதலைப் போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா தனது 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். தன்னலமற்ற அவரது சேவை, கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான அவரது முன்னணி பணிகள் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பவை. அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT