சிம்லாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
இமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவில் வியாழக்கிழமை மாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவில் வியாழக்கிழமை மாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சிம்லா பகுதியில் வியாழக்கிழமை மாலை 7.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.