கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபன்கர் தட்டா ஸ்ரீதரன் பிள்ளைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி கோவா ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதன்மூலம், ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு முதன்முறையாக முழு நேர ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை பதவியேற்றிருக்கிறார்.
முன்னதாக, கேரள பாஜக தலைவராகவும், மிசோரம் ஆளுநராகவும் ஸ்ரீதரன் பிள்ளை இருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.