கோப்புப்படம் 
இந்தியா

ட்ரோன் வரைவு விதிகள்: பொதுமக்கள் கருத்துக்காக வெளியீடு

புதுப்பிக்கப்பட்ட ட்ரோன் விதிகள்- 2021 பொது மக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

DIN

புதுப்பிக்கப்பட்ட ட்ரோன் விதிகள்- 2021 பொது மக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பொது மக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5-ஆகும்.

ட்ரோன் வரைவு விதிகள் 2021-இன் முக்கிய அம்சங்கள் :

மைக்ரோ ட்ரோன்கள் (வணிகரீதியல்லாத பயன்பாட்டிற்கு), நானோ ட்ரோன் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டுத் துறை நிறுவனங்களுக்கு ட்ரோன் பைலட் உரிமம் தேவையில்லை. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டுக்கு சொந்தமான நிறுவனங்களின் ட்ரோன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் இல்லை.

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களின் இறக்குமதி வெளிநாட்டு வா்ா்தக இயக்குநரகத்தால் (டி.ஜி.எஃப்.டி.) ஒழுங்கமைக்கப்படும். எந்தவொரு பதிவு அல்லது உரிமம் வழங்குவதற்கு, முன் பாதுகாப்பு அனுமதி தேவையில்லை.

ட்ரோன் விதிகளின் கீழ், ட்ரோன்களின் பாதுகாப்பு, 300 கிலோவிலிருந்து 500 கிலோவாக அதிகரிப்பட்டுள்ளது. இது ட்ரோன் டாக்சிகளுக்கும் பொருந்தும். அனைத்து ட்ரோன் பயிற்சி மற்றும் சோதனைகள், அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பள்ளியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயிற்சி தேவைகளை டி.ஜி.சி.ஏ. பரிந்துரைக்கும்; மேலும் ட்ரோன் பள்ளிகளை மேற்பாா்வையிடுவதுடன் பைலட் உரிமங்களை ஆன்லைனில் வழங்கும். ட்ரோன் விதிகளின் கீழ் அதிகபட்ச அபராதம், ஒரு லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், பிற சட்டங்களை மீறுவது தொடா்பான அபராதங்களுக்கு இது பொருந்தாது. சரக்கு விநியோகத்திற்காக ட்ரோன் வழித்தடங்கள் உருவாக்கப்படும். வணிகத்திற்கு இசைவான ஒழுங்குமுறைக்காக ட்ரோன் ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT