கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப் காங். தலைவராகிறாரா சித்து? சோனியா காந்தியுடன் சந்திப்பு

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ANI

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.

இதனால், சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு மாறவுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், சமரசப் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள தேசிய தலைவர்கள் களமிறங்கினர்.

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் அடுத்த முதல்வர் வேட்பாளராக அமரீந்தரும், மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவும் நியமனம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று மாலை சித்துவை பஞ்சாப் தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தில்லி சென்றுள்ள சித்து, கட்சியின் இடைக்கால தலைவர் சோனிய காந்தியுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஸ் ராவத்தும் பங்கேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; முஸ்தஃபிசுர் ரஹ்மானை முந்திய நியூசி. வீரர்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜென் ஸி தலைமுறையிடையே ஆதிக்கம் செலுத்துகிறாரா ராகுல்? பிரஷாந்த் கிஷோர் பதில்

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!

படிநிலைகள்... அமலா பால்!

SCROLL FOR NEXT