இந்தியா

கன்வர் யாத்திரை ரத்து: ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு

DIN


உத்தரப் பிரதேச அரசின் கோரிக்கையை அடுத்து கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

பிகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து ஹரித்வாருக்கு யாத்திரையாக செல்லும் மக்கள் கங்கை ஆற்றிலிருந்து வீட்டிற்கு தண்ணீர் எடுத்து செல்வர். இதுவே கன்வர் யாத்திரையாகும்.

ஆண்டுக்கு ஒரு முறை சுமார் 3 கோடி மக்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வர். கரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், இந்த யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்தது.

இருப்பினும், ஜூலை 25ஆம் தேதி முதல் யாத்திரையை நடத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கினார். இவ்விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கும் முடிவை உத்தரப் பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது.

இந்த நிலையில், கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூடுதல் தலைமை செயலர் (தகவல்) நவ்நீத் சேகல் கூறுகையில், "உத்தரப் பிரதேச அரசின் கோரிக்கையை அடுத்து கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது" என்றார்.

கரோனா பெருந்தொற்றால் கன்வர் யாத்திரையானது கடந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT