இந்தியா

மதுவிலக்கு அமலிலுள்ள பிகாரில் மது விருந்து வைத்த பாஜக தலைவர்.. அதுவும் கட்சி அலுவலகத்திலேயே!

DIN


மது விலக்கு அமலிலுள்ள பிகாரில் பாஜக தலைவர் ஒருவர் மது அருந்தும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜன்ஜார்பூர் பாஜக மாவட்டத் தலைவர் சியாராம் ஷா. இவர் கட்சி அலுவலகத்தில் மது விருந்து நடத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த மது விருந்து விடியோவில் சியாராம் ஷா பின்னணியில் ஓடும் ஒரு இசையுடன் கையில் மதுவுடன் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவருக்கு முன் உள்ள மேசையில் சிப்ஸ் பாக்கெட்டுகளும் இடம்பெற்றிருந்தன. அவருடன் மேலும் இரண்டு பேர் விடியோவில் வருகின்றனர். ஆனால், அவர்களது முகம் அடையாளம் காணமுடியவில்லை.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டபோதிலும், இதுதொடர்பாக வைரலாகும் விடியோ மற்றும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவில்லை.

ஆனால், இதுகுறித்து சியாராம் ஷாவைத் தொடர்புகொண்டபோது அவர் கூறியது:

"இந்த விடியோ உண்மைத்தன்மையற்றது. எனக்கு எதிராக யாரோ சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். விடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. என்னை அவமானப்படுத்த யாரோ என்னுடைய முகத்தை விடியோவில் இணைத்துள்ளனர்" என்றார்.

ஜன்ஜார்பூர் காவல் நிலைய அதிகாரி சந்திரமணி தெரிவித்தது:

"இந்த விடியோ எங்களுக்குக் கிடைத்தது. அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விடியோவில் அடையாளம் காண முடியாத நபர்களின் முகத்தைக் கண்டறியவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்."

பிகாரில் பாஜகவின் முழு ஆதரவுடன் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது சாதனை முடிவு என முதல்வர் நிதிஷ் குமார் கோருகிறார். ஆனால், அதே பிகாரில் பாஜக மாவட்டத் தலைவரே விடியோவில் மது அருந்தியுள்ளது சட்டத்தை நகைப்புக்குள்ளாக்கும் வகையில் உள்ளதாக விமரிசனங்கள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT