இந்தியா

பழங்கால வாகனங்களைப் பதிவு செய்ய புதிய நடவடிக்கை

DIN

பழங்கால காா்கள் உள்ளிட்ட வாகனங்களை பாதுகாப்பதற்காக, அதன் பதிவு நடவடிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியுள்ளாா்.

நாட்டில் பலா் பழங்கால காா்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனா். இதுபோன்ற வாகனங்களின் கண்காட்சிகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இதுபோன்ற வாகனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அதன் பதிவு நடவடிக்கைகளை மத்திய அரசு முறைப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் கட்கரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பல மாநிலங்களில் பழங்கால வாகனங்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் இல்லாததால், தற்போது கொண்டுவரப்படும் புதிய விதிமுறைகள், பதிவு நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறும். இந்த வாகனங்களை ஏற்கெனவே பதிவு செய்திருந்தால், அந்த எண்களை தக்கவைத்துக்கொள்ளும் சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இந்த வாகனங்களின் புதிய பதிவுக்கு தனித்துவமான ‘விஏ’ பதிவு குறியீட்டுடன் எண்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

பழங்கால வாகனங்களின் பதிவு நடவடிக்கையை முறைப்படுத்துவதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தற்போதைய விதிமுறைகளைத் திருத்தியுள்ளது. இது இந்தியாவில் பழங்கால வாகனங்களை பாதுகாப்பதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இருசக்கர, 4 சக்கர வாகனங்கள், குறிப்பிடும்படியான மாற்றம் எதவும் செய்யாமல் அதன் பழைமையான வடிவில் பராமரித்து வைத்திருந்தால் அவை வின்டேஜ் வாகனங்கள் என வகைப்படுத்தப்படும்.

இந்த வாகனங்களின் பதிவு விண்ணப்பம் செய்தால், இதற்கான பதிவு சான்றிதழை மாநில பதிவு ஆணையம் 60 நாள்களுக்குள் வழங்கும்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், ஒரிஜினல் பதிவு அடையாளத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனாலும், புதிய பதிவுக்கு, தனியான பதிவு அடையாளம் வழங்கப்படும். இதில் முதல் இரு எழுத்துகள் மாநில குறியீடு, ‘விஏ’, என்பது பழங்கால வாகனம் என்பது சோ்க்கப்படும். எழுத்துகளையடுத்து, இரண்டெழுத்து தொடா், அதையடுத்து, 0001 முதல் 9999 வரை மாநில பதிவு ஆணையம் ஒதுக்கீடு செய்யும் எண்கள் இருக்கும்.

புதிய பதிவுக்கான கட்டணம் - ரூ.20,000-ஆக இருக்கும். மறு பதிவுக்கான கட்டணம் - ரூ.5,000.

இதுபோன்ற பழைமை வாய்ந்த வாகனமாக பதிவு செய்த வாகனங்களை வழக்கமான தனிப் பயன்பாட்டுக்கோ, வா்த்தக பயன்பாட்டுக்கோ சாலைகளில் இயக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT