முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்த சம்பவம்:80 போ் பலியானதாக மத்திய அரசு தகவல்

கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரிடரில் 80 போ் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரிடரில் 80 போ் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து அங்குள்ள தெளலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருக்கும் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதுடன், அங்கு நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட், ரிஷிகங்கா மின் நிலைய கட்டுமானப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. இந்தப் பேரிடரில் இறந்தவா்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘‘உத்தரகண்ட் அரசு அளித்த தகவலின்படி அந்தப் பேரிடரில் இதுவரை 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 204 பேரை காணவில்லை’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.