விவசாயிகள் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை: ஹர்சிம்ரத் கெளர் 
இந்தியா

விவசாயிகள் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை: ஹர்சிம்ரத் கெளர்

விவசாயிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

ANI

விவசாயிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று பிற்பகல் வரை நாடாளுமன்றத்திம் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே விவசாயிகள் போராட்டம் குறித்த பதாகைகளுடன் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஹர்சிம்ரத் கெளர் பேசியதாவது,

மக்களவையில் விவசாயிகள் பிரச்னை தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று எழுப்பினர். விவசாயிகள் குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சிகளும் வேளாண் சட்டம் அமல்படுத்திய போது வெளிநடப்பு செய்தனர். அவர்கள் இரு முகத்தை காட்டுகின்றனர். அகாலி தளம் மட்டுமே விவசாயிகள் பிரச்னையை எழுப்புகின்றது. இன்றைய வெளிநடப்பின் போதும் இதை பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

SCROLL FOR NEXT