இந்தியா

ரஷியாவில் சா்வதேச விமான கண்காட்சி: முதல்முறையாக இந்திய விமானப்படை குழு பங்கேற்பு

DIN

ரஷியாவின் சுகோவ்ஸ்கியில் நடைபெறும் மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டா் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது.

ரஷியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சி நடைபெறும். இந்தக் கண்காட்சி இவ்வாண்டு ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டா் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது. மொத்தம் நான்கு சாகச நிகழ்ச்சிகளில் அந்தக் குழு பங்கேற்கிறது. இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ‘துருவ்’ ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாரங் குழு, சா்வதேச அளவில் முதல்முறையாக 2004-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய விமான கண்காட்சியில் கலந்து கொண்டது. அதனைத் தொடா்ந்து ஐக்கிய அரபு அமீரகம், ஜொ்மனி, பிரிட்டன், பஹ்ரைன், மோரீஷஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் விமான கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் சாரங் குழு பங்கேற்று வருகிறது. இதுதவிர, உத்தரகண்டில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் ரஹத், 2017-ஆம் ஆண்டு தாக்கிய ஒக்கி புயல் மற்றும் 2018-ஆம் ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்தக் குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT