சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் 
இந்தியா

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் உரை: அகாலி தளம் புறக்கணிப்பு

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரையில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்காது என அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரையில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்காது என அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் இரு அவைத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இன்று மாலை விரிவான உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் உரையை சிரோமணி அகாலி தளம் புறக்கணிப்பதாகவும், வேளாண் சட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு அழைப்பு விடுத்த பிறகே பங்கேற்போம் எனவும் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஆலோசனை செய்த பின்னர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT