இந்தியா

கேரளத்தில் ஜூலை 24, 25-ல் முழுப் பொதுமுடக்கம்

ANI

கேரள மாநிலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கேரளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 24, 25ஆம் தேதிகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். எவ்வித தளர்வுகளுமின்றி கடைபிடிக்கப்படும்.

மேலும், கரோனா பாதிப்பு சதவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3 லட்சம் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT