இந்தியா

13 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு

DIN

பொதுத் துறை வங்கிகளால் 13.06 லட்சம் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) கடன்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்எஸ்எம்இ துறை அமைச்சா் நாராயண் ராணே மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டு ஜூன் 25 வரையிலான நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளால் 13.06 லட்சம் எம்எஸ்எம்இ கடன் கணக்குகள் மறுசீரமைப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.55,333 கோடி. அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ஜூலை 2 நிலவரப்படி ரூ.2.73 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ராணே கூறியுள்ளாா்.

13,327 கி.மீ. நெடுஞ்சாலை: கடந்த 2020-21 நிதியாண்டில் 13,327 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு 2021-22 நிதியாண்டுக்குள் 12,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT