இந்தியா

நாங்கள் என்ன குற்றவாளிகளா? ராகேஷ் திகைத்

ANI

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குற்றவாளிகளா என பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதனால், தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி அளித்ததையடுத்து ஜந்தர் மந்தர் நோக்கி விவசாயிகள் சென்று கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்தாண்டு குடியரசுத் தினத்தன்று நடைபெற்றது போல கலவரம் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த  ராஜேஷ் திகைத்,

நாங்கள் கலவரம் செய்பவர்களா அல்லது குற்றவாளிகளா. நாடாளுமன்றத்திற்கு 150 மீட்டர் தொலைவில் தான் ஜந்தர் மந்தர் உள்ளது. ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT