முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி: இரு அவைகளும் மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்து வரும் நிலையில் மூன்றாவது நாளாக கூடிய நாடாளுமன்றம் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 22 ஜூலை, 2021 at 4:17 PM
மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு
பகிர்:

எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்து வரும் நிலையில் மூன்றாவது நாளாக கூடிய நாடாளுமன்றம் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், முதல் நாள் கூட்டத்தொடரில் இருந்தே இரு அவைகளிலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதனால், ஜூலை 19 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது.  

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கினார்.

பின், பெகாசஸ் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கியதால், மாநிலங்களவை மற்றும் மக்களவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.